புற்றுநோய் பாதிப்பு.. 38 வயது பிரபல நடிகை காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்கள், தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ப்ரியா மராத்தே, புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 38.
2008-ஆம் ஆண்டு வெளியான 'ஹம்னே ஜீனே சிக்லியா' என்ற மராத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ப்ரியா, அதன்பின் பல திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தனது நீண்டகால நண்பரான சித்தார்த் என்பவரை 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, புற்றுநோயுடன் தீவிரமாக போராடி வந்த ப்ரியா, அதன் காரணமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் படப்பிடிப்புகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். ரசிகர்கள் அவர் மீண்டும் குணமடைந்து திரைக்கு வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்தனர். எனினும், தொடர் சிகிச்சைகள் பலனளிக்காமல், அவர் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
ப்ரியாவின் மறைவுக்கு பல திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran