”தலைகீழா நின்னாவாவது வாய்ப்பு கிடைக்குமா?”: வைரலாகும் பிரனிதாவின் புகைப்படம்

Last Modified ஞாயிறு, 23 ஜூன் 2019 (13:30 IST)
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை பிரனிதா, தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் பல வெற்றித்திரைப்படங்களில் நடித்தவர் பிரனிதா. இவர் உதயன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் எந்த திரைப்படமும் வெற்றிபெறவில்லை. அதலால் தமிழில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்துவிட்டது.

மேலும் தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் என்ற திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பட வாய்ப்பு இல்லையென்றாலும் தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொது தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Trying hard to maintain the “yoga face”! Happy international Yoga Day!

A post shared by Pranitha (@pranitha.insta) onஇதில் மேலும் படிக்கவும் :