திங்கள், 16 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஜனவரி 2026 (12:24 IST)

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை நதியா, தற்போது ஹாலிவுட்டின் முன்னணி நடிகை நிக்கோல் கிட்மேனைநேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக்கோல் கிட்மேன், ஆறு கோல்டன் குளோப் விருதுகளை வென்ற உலகப்புகழ் பெற்ற கலைஞர் ஆவார். ஆஸ்திரேலியாவில் தனக்கு பிடித்த ஒரே நடிகை அவர்தான் என்றும், அவரை சந்தித்தது ஒரு இனிமையான விருந்தாக அமைந்தது என்றும் நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
 
இந்த சந்திப்பின் போது நிக்கோல் கிட்மேனின் எளிமையை கண்டு வியந்ததாக நதியா குறிப்பிட்டுள்ளார். நதியாவை விட நிக்கோல் கிட்மேன் மிகவும் உயரமாக இருந்த போதிலும், புகைப்படத்திற்காக அவர் சற்று குனிந்து நின்றது நதியாவை நெகிழ செய்துள்ளது.
 
"அவர் மிகவும் அன்பானவர் மற்றும் அழகானவர்; இவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தும் அவர் காட்டிய எளிமை ஆச்சரியமாக இருந்தது" என்று நதியா பாராட்டியுள்ளார். இந்த அழகிய புகைப்படத்தைக் கண்ட ரசிகர்கள், 'இருவருமே என்றும் இளமை மாறாத அழகிகள்' எனப் பதிவிட்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran