வெள்ள நிவாரணத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி: நடிகை ஹன்சிகா அறிவித்தார்


Ashok| Last Modified ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (14:09 IST)
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள் பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். தற்போது நடிகை ஹன்சிகா தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ.15 லட்சம் அறிவித்துள்ளார்.
 
 
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் சினிமா நடசத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
 
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நிதி திரட்டி வருகிறது. ரஜினிகாந்த் ரூபாய் 10 லட்சமும், லாரன்ஸ் 1 கோடியும், சூர்யா, கார்த்தி சார்பாக 25 லட்ச ரூபாயும், விஷால் 10 லட்சமும், தனுஷ் 5 லட்சமும் நிவாரண நிதி அளித்துள்ளனர். 
 
விக்ரம் பிரபு மற்றும் பிரபு சார்பாக ரூபாய் ஐந்து லட்சம் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கியுள்ளனர். அதேபோல் சிவ கார்த்திகேயன் 5 லட்சம் அளித்துள்ளார்.
 
சத்யராஜ், சிபி ராஜ் சார்பில் ரூபாய் இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரமும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், கோலிவுட் முன்னணி நடிகை ஹன்சிகா தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ.15 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :