வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2015 (11:06 IST)

கார்த்தியுடன் பிரியாணியில் நடித்த நடிகை மரணம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் சின்ன வேடத்தில் தோன்றியவர் ஹானி. 
 
அந்தப் படத்தில் வரும் ஷோ ரூம் திறப்பு விழா காட்சியில் ஹானி நடித்திருந்தார். ஷோ ரூம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஹானியை கார்த்தி முதல் சந்திப்பிலேயே காதல் வலையில் வீழ்த்துவார். இருவரும் தொலைபேசி எண்களை பரிமாறிக் கொள்வார்கள்.
 
அஜீத்தின் ஆரம்பம் படத்திலும் ஹானி சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
ஹானிக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. பல மாதங்களாக அதற்கு அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார்.
 
ஹானியின் இளவயது மரணம் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.