வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வியாழன், 7 ஆகஸ்ட் 2014 (14:50 IST)

கமல், த்ரிஷா வழியில் அசின்: உடல் உறுப்புகளை தானம் செய்தார்

நடிகை அசின் தனது கண் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்தார். அதற்கான உறுதிமொழி பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

தனது உடலை தானம் செய்யும் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு உடல் தானத்தை திரையுலகில் தொடங்கி வைத்தவர் கமல். அவரை பின்பற்றி அவரது ரசிகர்கள் பலரும் உடல் தானம் செய்தனர்.

சமீபத்தில் நடிகை த்ரிஷா உடல் உறுப்புகளை தானம் செய்து உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார். தற்போது அசினும் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த அசின் இந்தி வாய்ப்பு கிடைத்ததும் தமிழ், தெலுங்கை புறக்கணித்து இந்திக்கு முன்னுரிமை அளித்தார்.

தற்போது அவர் கைவசம் ஒரேயொரு இந்திப் படம்தான் உள்ளது. அதுவும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு கிடைத்தது. இந்தியில் வாய்ப்பு குறைந்ததால் தமிழ், தெலுங்கில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.