வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (20:32 IST)

ரஜினியுடன் விமானப் பயணம் : இன்ப அதிர்ச்சியில் நடிகை

நடிகர் ரஜினிகாந்துடன் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்ததில் தமிழ் சினிமா நடிகை ஆஸ்னா சவேரி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.


 

 
நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் கதாநாயகியாய நடித்தவர் ஆஸ்னா சவேரி. 
 
சமீபத்தில் ரஜினி கபாலி படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றார். ஆஸ்னாவும் ஒரு படப்பிடிப்பிற்காக மலேசிய சென்றார். அப்போது இருவரும் ஒரே விமானத்தில் சந்திக்க நேர்ந்தது. ரஜினிய பார்த்ததும் ஆஸ்னா இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவரின் அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
 
அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்து “ யாருடன் இருக்கிறேன் என்று பாருங்கள். இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.