தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் யோகி பாபு… பிரம்மானந்தாவுடன் கூட்டணி!
அண்மை காலமாக தமிழில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு அனைத்துப் படங்களிலும் அவர் இருக்கிறார். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் கதையின் நாயகனாகவும் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்தன.
ஆனாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நகைச்சுவை வேடத்தில் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் யோகி பாபு பெயர் இருந்தால் படம் விற்பனை ஆகும் என்ற ஒரு பெயரை உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் அவரின் நகைச்சுவைகள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதாகவும் அவர் க்ளிஷே ஆகிவிட்டார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் இப்போது யோகி பாபு முதல் முறையாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தில் பிரம்மானந்தாவுடன் இணைந்து ஒரு நகைச்சுவை வேடத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முரளி மனோகர் ரெட்டி இயக்குகிறார்.