1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor vishnu vishal reply to vijay fans

விஜய்னு சொன்னா என்ன தப்பு?.. நான் Sorry கேட்க மட்டேன்!.. விஷ்னு விஷால் கோபம்!...

vishnu vishal
வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால். அதன்பின் பல படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ராட்சசன், கட்டாகுஸ்தி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. விரைவில் கட்டா குஸ்தி 2 வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து தொடர்ந்த பல ஊடகங்களுக்கும் விஷ்ணு விஷால் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ‘இப்பொழுது சமூக வலைத்தளங்கள் முழுவதுமாக வன்மமாக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் திட்டுகிறார்கள்.. தலைவரே (ரஜினி) மைக்கை பிடித்துக் கொண்டு எனக்கும் விஜய்க்கும் ஒன்றுமில்லை என விளக்கம் சொல்லுமளவுக்கு வன்மம் அதிகரித்துவிட்டது.

தலைவர் நான்கு நாளைக்கு எந்த பதிவும் போடாமல் அமைதியாக இருந்தால் ஏதோ ஒன்றை கிளப்பி விடுகிறார்கள். வேறு வழியில்லாமல் அவர் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.. இதையெல்லாம் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது’ என்று பேசினார். இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ரஜினியை தலைவர் என சொல்லிவிட்டு விஜயை மட்டும் எப்படி பெயர் சொல்லி எப்படி அழைக்கலாம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதற்கு விளக்கமளித்துள்ள விஷ்ணு விஷால் ‘ரஜினி சார் விஜயை விஜய் என்றுதான் சொன்னார். அதைத்தான் நானும் சொன்னேன் அதில் என்ன தவறு இருக்கிறது? யாரையும் நான் அவமத்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அப்படி சொல்லவில்லை.. சமூகவலைத்தளங்களில் நான் பார்க்கும் வன்மங்கள் பற்றிதான் பேசுகிறேன்.. அதிலிருந்து நான் பின்வாங்க போவதில்லை’ என கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
அழுகையை 'zoom' செய்து காட்டி பார்வையாளர்களை கவர்கிறார்கள்.. பாக்யராஜ் மறைவில் ஊடகங்களின் செயல் குறித்து ராதிகா