தொடர்புடைய செய்திகள்
- பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?.. முதல்வர் விஜய் இன்று ஆலோசனை...
- அரசு நிர்வாகத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தவெக அரசு.. 5 புதிய 'சிறப்பு மையங்கள் அமைக்க திட்டம்..!
- ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தவெக அரசின் ஆரம்பக்கட்ட சறுக்கலா?
- படம் ரிலீஸாகி ஒரு வாரத்திற்கு 5 கட்சிகள் திரையிட அனுமதி!.. முதல்வர் விஜய் அறிவிப்பு...
- இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...
5 காட்சி அனுமதி: முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் விஷால் நெஞ்சார்ந்த நன்றி!
திரைப்பட துறையின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்று, புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய திரைத்துறையின் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். "மக்களின் அன்பிற்குரிய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தற்போதைய திரைத்துறையின் இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்டு, படம் வெளியாகும் முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட அரசாணை பிறப்பித்திருப்பது தயாரிப்பாளர்களின் வருவாய் ஈட்டலுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்" என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இதேபோல பொதுமக்களின் நலனுக்காகவும், அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்காகவும் அடுத்தடுத்து பல அதிரடி அரசாணைகள் இந்த அரசிடமிருந்து வெளியாகி, மாநிலத்திற்கு ஒரு முற்போக்கான வளர்ச்சியைத் தரும் என்று நம்புகிறேன்; எங்கள் அனைவரின் சார்பாகவும் ஒரு பெரிய 'விசில்' சத்தம்" என மகிழ்ச்சியுடன் விஷால் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
