1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2016 (10:55 IST)

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால்: அடுத்த போர் ஆரம்பம்!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால்: அடுத்த போர் ஆரம்பம்!

சமீபத்தில் தமிழக தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 
 
நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வந்தார். இதனால் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வந்தது.
 
இருவருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து அதிரடியாக தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் வருகிற தமிழக தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டதைப்போல இளம் தயாரிப்பாளர்கள் குழு அடுத்து வரக்கூடிய தமிழக தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் என்றார்.