1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Actor Vijay Sethupathi Named Tamil Nadu Brand Ambassador for Regal Jewellers

சிம்ரனுடன் இணைந்த விஜய் சேதுபதி.. தி நகரின் நடந்த பிரமாண்டமான விழா...

விஜய் சேதுபதி
பிரபல நகை நிறுவனமான 'ரிகல் ஜூவல்லர்ஸ்'  தனது தமிழகத்தின் முதல் கிளை ஷோரூமை சென்னையின் தியாகராய நகரில்  பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த புதிய பிராண்டின் தமிழகத்திற்கான பிராண்ட் தூதுவராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நடிகை சிம்ரன் இந்த நிறுவனத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது விஜய் சேதுபதியும் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 
இதன் தொடக்க விழாவில், சமுதாய பணியை நோக்கமாக கொண்டு 'ரிகல் சுமங்கலி நேர்மை விழா' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய 25 ஏழை ஜோடிகளுக்கு திருமண உதவி செய்வதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோடிகளுக்கு இதற்கான உறுதிமொழி சான்றிதழ்கள் சட்டமன்ற பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாககர், எம்.எல்.ஏ. வி.எம்.எஸ். முஸ்தபா மற்றும் நிறுவனத்தின் தலைவர் சிவதாசன் டி.கே. உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன. 
 
ஆடியில் தொடங்கும் இந்த திருமண உதவிகள் மூலம் பல எளிய குடும்பங்கள் பயனடையவுள்ளன. 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நகை நிறுவனம் கேரளா மற்றும் கர்நாடகாவை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் தனது காலடியை பதித்துள்ளது. 
 
மறுபுறம், நடிகர் விஜய் சேதுபதி பூரி ஜெகன்நாத் இயக்கும் படம் மற்றும் 'ஏஸ்', 'மூக்குத்தி அம்மன் 2' போன்ற பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ப்ரோ.. கொஞ்சம் ரிலாக்ஸ்! – யஷஸ்வியுடன் காதலா? மிருணாள் தாகூர் கொடுத்த பதில்!