1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor thiyagu sharing flashback about vijayakanth

விஜயகாந்தை அசிங்கமா திட்டினேன்!.. ஆனா அவன்!.. நடிகர் தியாகு ஃபீலிங்!..

thiyagu
நடிகர் விஜயகாந்தை தியாகுவும் பல வருட நண்பர்கள். இருவருமே ஒன்றாக சினிமாவில் வளர்ந்தவர்கள். விஜயகாந்த் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்களில் தியாகு அரசியல்வாதியாக நடித்திருப்பார். அல்லது வேறு ஏதேனும் வேடத்தில் நடிப்பார். இருவரும் வாடா போடா நண்பர்கள். இன்னும் சொல்லப்போனால் தியாகு விஜய்க்கு மிகவும் நெருக்கமான நண்பர்.
 
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய தியாகு ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். நான் திமுக கட்சியில் இருந்து அதன்பின்னர் அதிமுகவுக்கு போய்விட்டேன். அப்போ விஜயகாந்தை கிழிக்கணும்னு கட்சியில சொல்றாங்க. அதனால ‘குடிகார பயலே’ அப்படி இப்டின்னு ரொம்ப கண்ணா பின்னான்னு திட்டினேன். இதை தேமுதிக கட்சி எம்எல்ஏ விஜயகாந்த்கிட்ட சொல்லிட்டார்.
 
உங்கள பத்தி தியாகுது தப்பு தப்பா பேசுறார்ன சொல்ல அவன்  சொன்ன வார்த்தை என்னன்னா ‘அவன் ஒரு கட்சியில் இருக்கான். கட்சி தலைமை என்ன சொல்லுதோ அதை செய்திருக்கான்.. என்னைக்கு அவன் என் நண்பன்.. கட்சியில இருக்கும்போது அப்படித்தான் பேச சொல்லுவாங்க’  அப்படின்னு சொல்லி எம்.எல்.ஏ வாயை அடைச்சான். இதை ஒரு எம்.எல்.ஏ என்கிட்ட சொன்னாரு. அதைக்கேட்டு நான் அழுதுட்டேன்.. அப்போ அவனுக்கு எவ்வளவு நல்ல மனசு பாருங்க’ என பீல் பண்ணி பேசியிருக்கிறார்.
 
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
ரூ. 350 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் வேட்டை! ஓடிடி-க்கு வரும் சூர்யாவின் 'கருப்பு