1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor suriya wishing dc movie team

DC பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வருது!.. வாழ்த்து சொன்ன சூர்யா!..

suriya dc
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்து நேற்று வெளியான திரைப்படம் டிசி. இதுவரை இயக்குனராக மட்டுமே இருந்த லோகேஷ் டிசி திரைப்படம் மூலம் நடிகராகிவிட்டார். வழக்கம்போல் அருண் மாதேஸ்வரன் ஒரு ரத்தம் தெறிக்கும் ஆக்சன் கதையை திரைப்படமாக எடுத்திருக்கிறார். நேற்று வெளியான இந்த திரைப்படம் தமிழகத்தில் 6 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், டிசி படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து சொல்லியிருக்கிறார். லோகேஷ் கனகராஜுக்கும், அருண் மாதேஸ்வரன் ஆகியோருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.. எல்லோரும் டிசி படம் பற்றி பேசுகிறார்கள். படம் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். அனிருத்தின் ஆல்பம் அருமை.. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டிசி படத்தின் முதல் நாள் வசூல்...லோகேஷ் கனகராஜ் செஞ்ச தரமான சம்பவம்!