வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Muruggan
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2016 (18:34 IST)

செல்வராகவனுடன் கை கோர்க்கும் சூர்யா - புதிய பட அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 36வது படத்தை, இயக்குனர் செல்வராகவன் இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது.


 

 
செல்வராகவனின் இயக்கத்தில், இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்த ‘ நெஞ்சம் மறப்பதில்லை’ படம் முடிந்து ரிலீஸுற்கு தயாராகி விட்டது.
 
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 36வது படத்தை, செல்வராகவன் இயக்குவது உறுதியாகியுள்ளது. நடிகர் சூர்யா, மற்றும் செல்வராகவன் ஆகியோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றிய செய்தியை உறுதி செய்துள்ளனர்.
 
எனவே, வித்தியாசமான ஒரு காம்பினேஷனில் ஒரு புதிய படத்தை எதிர்பார்க்கலாம். ரசிகர்களுக்கு காத்திருக்கிறது விருந்து.