1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor suriya increased his salary after karuppu hit

இனிமே என் சம்பளம் ரூ.100 கோடி!.. சூர்யா எடுத்த அந்த முடிவு!..

karuppu hit
கருப்பு திரைப்படம் மூலம் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் சூர்யா. ஏனெனில் சிங்கம் 2 வுக்கு பின் சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் கடந்த பல வருடங்களாகவே அமையவில்லை. எனவே ஒரு நல்ல வெற்றிக்காக சூர்யா காத்திருந்த போதுதான் அவருக்கு கருப்பு படத்தின் வெற்றி அமைந்திருக்கிறது.

இந்த திரைப்படம் 340 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 200 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, சூர்யா தன் சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தியிருக்கிறாராம். சூர்யா பல வருடங்களாகவே அவரின் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தவில்லை. தற்போது கருப்பு படம் அதிக வசூலை பெற்றுள்ளதால் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்..

அதேநேரம் சூர்யா பெரும்பாலும் தனது சொந்த நிறுவனம் அல்லது தனது உறவினர்களின் நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். எப்படி இருந்தாலும் இனிமேல் சூர்யாவின் சம்பளம் 100 கோடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.