1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor suriya gifted new car to karuppu camera man

கருப்பு சூப்பர் ஹிட்!.. ஒளிப்பதிவாளருக்கு சூர்யா கொடுத்த சூப்பர் கிஃப்ட்!..

karuppu
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 15ம் தேதி வெளியான திரைப்படம் கருப்பு. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வழக்கறிஞர் மற்றும் கருப்பண்ணசாமி என இரண்டு தோற்றங்களில் சூர்யா நடித்திருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே இயக்கி வெளியான மூக்குத்தி அம்மன் ஸ்டைலில் இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் கிடைத்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் கருப்பு ஒரு மெகா வெற்றிப்படமாக மாறியுள்ளது. இதுவரை கருப்பு படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.

car

இந்த மகிழ்ச்சியை படக்குழு கொண்டாடி வருகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா கருப்பு படத்தின் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு 30 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா BE6  காரை பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை விஷ்ணு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து சூர்யாவுக்கு நன்றி கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சாய் அபயங்கருக்கும் காரை பரிசளித்த சூர்யா!.. ஆர்.ஜே.பாலாஜிக்கு என்ன?...