1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor suriya denied to act in five movies

துப்பாக்கி to ஆடுஜீவிதம்! - சூர்யா நடிக்க மறுத்த 5 முக்கிய திரைப்படங்கள்!..

suriya
நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதன் பின் நந்தா, பிதாமகன், காக்க காக்க உள்ளிட்ட படங்களில் நடித்து நடிப்பில் மெருகேற்றிக் கொண்டார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறினார். இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது..

சூர்யா நடிக்க மறுத்த முக்கிய 5 திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்.

ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி கதையை எழுதியம் சுர்யாவிடம் அந்த கதையை சொன்னார். ஆனால் அவர் நடிக்க மறுக்கவே அந்த படத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆனது. விஜய்க்கும் அது முக்கிய படமாக அமைந்தது.

அதேபோல் வசந்த் இயக்கிய ஆசை பட வாய்ப்பு முதலில் சூர்யாவுக்கு வந்தது. அவர் மறுத்ததால் அது அஜித்துக்கு போனது.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் முதலில் சூர்யாவே நடிக்கவிருந்தார். ஆனால் சூர்யா மறுக்கவே அதன்பின் விக்ரம் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

மறைந்த இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் ஷாம், அருண் விஜய் ஆகியோர் நடித்த இயற்கை பட வாய்ப்பு முதலில் சூர்யாவுக்கு சென்றது. அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

அதேபோல் ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு வந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் அதில் பிரித்விராஜ் நடித்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஜனநாயகனை லீக் பண்னதே நீங்களா?!.. அரசியல்தான் காரணமா?!. ஹெச்.வினோத் பதில் இதுதான்!..