நடிகர் புரோட்டா சூரி புதிய அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு?

ashok| Last Updated: சனி, 29 ஆகஸ்ட் 2015 (16:34 IST)
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் புரோட்டா சூரி. இவர் தனது 38 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார் . 1999 ல் திரையுலகில் நுழைந்தவருக்கு 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படமே புரோட்டா சூரியாக ஓர் அடையாளத்தை கொடுத்தது. இதற்கு பிறகு நடித்த படங்கள் இவருக்கு பல வெற்றியை கொடுத்துள்ளது .தற்போது அஜித் படம் உட்பட பலர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி கதநாயகனாகவும்  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சூரியின் 38 வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தமிழர்களின் பெருமைகளையும் ,பாரம்பரியத்தையும் தமது நடிப்பிலும் வசனத்திலும் இயல்பாக வெளிப்படுத்தி வரும் நடிகர் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ.வையும் தனது நண்பர்களுடன் நேரில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்தது. மேலும் தனது பிறந்த நாள் அன்று சென்னை விஜயா மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார் .

நடிகர் சூரிக்கு   பல்வேறு  கட்சியிலிருந்து தற்போது  அழைப்பு வந்துள்ளதாக தெரிகிறது .ஆனால் எந்த கட்சியிலும் சேர விருப்பம் இல்லை என்பதால் தனியாக அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :