புதன், 10 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (08:18 IST)

நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!

நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!
காதல் என்ற படத்தில் நடித்த நடிகர் சுகுமார் மீது நடிகையை ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பரத் நடித்த காதல் திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த சுகுமார், சென்னை வடபழனி சேர்ந்த துணை நடிகை உடன் அறிமுகம் பெற்றார். ஏற்கனவே, துணை நடிகை கணவரை பிரிந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், சுகுமாரும் துணை நடிகையும் நெருக்கமாக பழகினர்.

மேலும் சுகுமார் தனது மனைவியை விவாகரத்து செய்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று துணை நடிகையிடம் ஆசை வார்த்தை கூறியதாகவும், அவரது பேச்சை நம்பி, சுகுமார் உடன் கணவன் மனைவி போல் வாழ்ந்ததாகவும் புறப்படுகிறது.

இந்த நிலையில், சில தினங்களாக, துணை நடிகையை சந்திப்பதை சுகுமார் தவித்ததாகவும், செல்போன் மூலம் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, அந்த நடிகை காவல்துறையில் புகார் அளித்த நிலையில், சுகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சுகுமார் மீது நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை, தாழ்வு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், தலைமறைவாக உள்ள சுகுமாரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva