ஏஏஏ படத்தின் ஓபனிங் சாங் - தயாரிப்பாளரை மிரட்டும் சிம்பு?


Murugan| Last Updated: ஞாயிறு, 21 மே 2017 (17:55 IST)
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பனவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

 
இந்த படம் தொடங்கியதிலிருந்தே, இப்படத்தின்  தயாரிப்பாளருக்கு படக்குழு பல்வேறு வகையில் குடைச்சலை கொடுத்து வந்தது. அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகளை  படம்பிடிக்க, சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் சுமார் 20 பேர் தாய்லாந்திற்கு சென்றிருந்தனர். ஆனால், 20 நாட்களாக அவர்கள் அங்கு தங்கியும் 2 நாட்கள் மட்டுமே முழுமையான படப்பிடிப்பு நடத்தினார்களாம். இதனால், இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம். உடனடியாக அவர்களை சென்னை திரும்பி வரும்படி கூறினார்.  
 
மேலும், தாய்லாந்தில் எடுக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் எடுக்க சொன்னார் எனவும்,  இதனால், படக்குழுவினர் என்ன செய்வது எனத் தெரியமால் முழித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், இப்படத்தில் ஒர்  ஓபனிங் பாடல் இருக்கிறது. ரத்தம் என் ரத்தம் என தொடங்கும் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வைரைமுத்து எழுதி, சிம்புவே அப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என இப்படத்தின் இயக்குனர் ஆதிக்ரவிச்சந்திரனின் கேட்டுக்கொண்டாராம் சிம்பு. 
 
ஆனால், படத்தின் பட்ஜெட் ஏற்கனவே பல மடங்கு எகிறிவிட்டதால், அதற்கு கை விரித்து விட்டாராம் தயாரிப்பாளர். இதனால் கோபமடைந்த, அந்த பாடலை மட்டும் என் விருப்பப்படி எடுக்காவிடில், இந்தப் படத்தை பார்க்க வேண்டாம் என என் ரசிகர்களிடம் கூறுவேன் என மிரட்டி வருகிறாராம்.


இதில் மேலும் படிக்கவும் :