ஃப்ளாப் படத்தை ஹிட் என்பதா? - கடவுள் இருக்கான் குமாரு படக்குழுவினரை தாக்கிய சிம்பு


Murugan| Last Modified புதன், 23 நவம்பர் 2016 (15:37 IST)
நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்து கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் அச்சம் என்பது மடமையடா. இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

 

 
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற படம் வெளியானது. 
 
இப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என தெரிவிக்கும் செய்திகளை ஜீ.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். 
 
இந்நிலையில், நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் “பிளாப் ஆன படங்களையெல்லாம் ஹிட் படங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படி எனில் என் படத்தை என்ன சொல்லுவார்கள்?.. வசூலை குறிப்பிடுவதை விட நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறுவதே நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.


 

 
அவர் ஜீ.வி. பிரகாஷ் படம் என நேரிடையாக குறிப்பிடவில்லை என்றாலும், அவரின் படத்தைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்று பேசிக் கொள்கிறார்கள்.
 
ஏனெனில், கடவுள் இருக்கான் குமாரு படத்தில் சிம்பு பாடிய பீப் பாடலை கிண்டலடித்து காட்சிகள் இருக்கிறது. அதனால் கோபம் அடைந்துதான் சிம்பு இப்படி பதிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :