1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor simbu doing next movie with keertheeswaran

சிம்பு நடிக்கும் புதிய படம்!.. அரசன் எப்போ ரிலீஸ்?!. பரபர அப்டேட்!..

actor simbu
கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் சிம்பு. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. சிம்பு படம் என்றாலே படம் துவங்கியது முதல் முடிந்து ரிலீஸாகும் வரை பல பிரச்சினைகளை சந்திக்கும். கண்டிப்பாக அதற்கு சிம்புதான் காரணமாக இருப்பார்.

அரசன் படம் துவங்கி சில நாட்கள் படபிடிப்பு நடந்த போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மூலம் பிரச்சினை வந்தது. ஷூட்டிங் சில நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. தற்போது அதெல்லாம் பேசி முடிக்கப்பட்டு ஷூட்டிங் மீண்டும் நடந்து வருகிறது. இந்நிலையில் அரசன் படத்தை முடித்துவிட்டு Dude படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஒரு பக்கம் அரசன் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
விக்னேஷ் சிவன் என்னை மறந்துட்டான்!.. வாழ்க்கை மாறிடிச்சி!.. நடிகை சோனா ஃபீலிங்...