1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (11:14 IST)

நாடக நடிகர்கள் வேறு, சினிமா நடிகர்கள் வேறு - நடிகர் சித்தார்த்தின் மனு தள்ளுபடி

மூன்று வருடங்களுக்கு முன் மத்திய அரசு கிராமிய மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளித்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் சென்னை உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசின் உத்தரவு பாரபட்சமாக உள்ளது. சினிமா நடிகர்களுக்கும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு, இந்த மனுவை நேற்று விசாரித்தது. 
 
விசாரணை முடிவில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம் - 
 
நாடக நடிகர்களின் திறனுடன் சினிமா நடிகர்களை இணைத்துப் பார்க்க முடியாது. பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை ஊக்குவிப்பதற்காக சேவை வரியில் இருந்து கிராமியக் கலைஞர்கள், நாடக நடிகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
கிராமியக் கலைஞர்கள், நாடக நடிகர்கள் பெரும் நிதிச் சிக்கலில் இருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் அதுபோல இல்லை. எனவே, தகுதி இல்லாத இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்.