1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Actor Sathyaraj and Daughter Divya Slam Bayilvan Ranganathan Over Fake AI Wedding Rumors

திவ்யா சத்யராஜ்க்கு எத்தனை திருமணம் நடந்தது? எத்தனை குழந்தைகள்? பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல்..!

திவ்யா சத்யராஜ்
சமூக ஊடகங்களில் பிரபலங்கள் குறித்த வதந்திகள் பரவுவது தொடர்கதையாகி வரும் நிலையில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் பற்றிய சில அவதூறான தகவல்கள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. 
 
பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டி ஒன்றில், திவ்யா சத்யராஜுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூரில் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், அவர் தனது கணவரை 14 ஆண்டுகள் கொடுமைப்படுத்தியதாகவும், தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாகவும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், அவருக்கு இரண்டு திருமணங்கள் ஆகி மூன்று குழந்தைகள் இருப்பதாக சில போலி புகைப்படங்களும் இணையத்தில் பரப்பப்பட்டன.
 
இந்த வதந்திகளுக்கு திவ்யா சத்யராஜ் மற்றும் அவரது தந்தை சத்யராஜ் ஆகிய இருவரும் இணைந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பயில்வான் ரங்கநாதன் கூறிய கதைகள் அனைத்தும் அப்பட்டமான பொய்கள் என்றும், அவர் தங்களது குடும்பத்தினரிடம் அவ்வப்போது பணம் கேட்டு வருபவர் என்றும் திவ்யா அம்பலப்படுத்தியுள்ளார். 
 
மேலும், இணையத்தில் பரவும் திருமணப் புகைப்படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
நடிகர் சத்யராஜ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், தன் மகள் தன் சொந்த உழைப்பால் உயர்ந்த கண்ணியமான பெண் என்றும், அவர் குறித்துப் பரப்பப்படும் செய்திகளில் எள்ளளவும் உண்மையில்லை என்றும் வதந்திகளுக்குச் சாட்டையடி கொடுத்துள்ளார். வியூஸ்களுக்காக ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்க முயலும் இத்தகைய போக்கிற்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Webdunia