1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor rajinikanth helped bava lakashmanan

பாவா லட்சுமணனுக்கு ஒரு லட்சம்.. மாசம் 10 ஆயிரம்!.. ரஜினி உதவி!...

bava lakshmanan
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் பாவா லட்சுமணன். சொல்லாமலே படத்தில் நடித்த துவங்கி அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்திருக்கிறார். சந்தானம், வடிவேல் ஆகியோருடன்  பல படங்களில் இவர் காமெடி செய்திருக்கிறார். அதில், வடிவேலுவுடன் இவர் நடித்த படங்கள் அதிகம். காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

சக்கரை நோய் காரணமாக கடந்த சில வருடங்களாக இவர் அவதிப்பட்டு வருகிறார். இது தொடர்பான சிகிச்சையில் அவரின் காலில் மூன்று விரல்களை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். எனவே அவர் நடக்க சிரமப்படுவதாக சொல்லப்படுகிற.து இவருக்கு ஏற்கனவே கே.பி.ஒய் பாலா உள்ளிட்ட சிலர் உதவி செய்திருந்தனர்..

சமீபத்தில் கூட லெஜெண்ட் சரவணா அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக சொல்லப்பட்டது. அதேபோல், அரசு தரப்பில் இவருக்கு வீடும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய பாவா லட்சுமணன் ‘ ரஜினி சார் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்.. ஒரு வீடு ஒன்னு வாடகை கிடைச்சிடுச்சுன்னு ரஜினி சாரோட அசிஸ்டன்ட் சுப்பையாவுக்கு போன் பண்ணி சொன்னேன்.. ரஜினி சார் மாசா மாசம் பத்தாயிரம் செலவுக்கு உங்க அக்கவுண்ட்ல போடுறேன்னு சொல்லியிருக்கார்.. அது மட்டும் இல்லாம வண்டி ஓட்ட வேண்டாம்.. ஆட்டோல போங்க.. வேற எந்த உதவியாக இருந்தாலும் சார் பண்றேன்னு சொல்லியிருக்கார்’  என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
தப்பான புரமோஷனால் ஃபிளாப்பான புலி!.. நடிகர் நட்டி சொன்ன ஃபிளாஷ்பேக்!..