தொடர்புடைய செய்திகள்
- கெளதம் காம்பீரின் டீப்ஃபேக் வீடியோ.. கூகுள், மெட்டா, அமேசான் நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு..!
- மனைவி வீட்ல சும்மா இருக்காங்கன்னு சொல்லக்கூடாது!.. நீதிமன்றம் கருத்து!...
- என்னை கடுப்பேத்தினா இதத்தான் செய்வேன்!.. சமந்தா சொல்றத கேளுங்க!..
- பாமக அன்புமணிக்கே! - மீண்டும் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணையம்.. என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
- தனியார் பள்ளி கட்டண விவகாரம்: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிம்மதி!
சமந்தா விவாகரத்துக்கு பின் நீதிமன்றத்தை நாடிய நாக சைதன்யா.. டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்..
இணையதளங்களில் தனது உரிமைகளை பாதுகாக்கவும், தனது அடையாளம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் கோரி பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பிறகு, அவர் குறித்து இணையத்தில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் ட்ரோலிங் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த மனு மே 29 அன்று நீதிபதி ஜோதி சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நாக சைதன்யா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இணையத்தில் வெளியாகும் சில பதிவுகள் நாக சைதன்யாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், நடிகரின் அனுமதியின்றி அவரது தோற்றத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஏஐ வீடியோக்கள், அநாகரீகமான உள்ளடக்கங்கள் மற்றும் ஆபாசப் பொருட்கள் மூலம் அவரது அடையாளம் தவறாக வணிகமயமாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி சிங், "பொது வாழ்க்கையில் இருக்கும் பிரபலங்கள் கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாவது இயல்புதான் என்றாலும், அதற்கும் சில எல்லைகள் உள்ளன" என்று சுட்டிக்காட்டினார். விசாரணையின் முடிவில், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியதோடு, நாக சைதன்யாவின் ஆளுமை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
