லோகேஷ் நடிச்சிட்டு சுத்திக்கிட்டு இருக்கான்!.. கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியாகிய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கைதி. ஒரு இரவில் நடக்கும் கதைக்கு லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பான ஆக்சன் திரைக்கதை அமைத்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் கார்த்தியும் சிறப்பாக நடித்திருந்தார்.
மேலும் நரேன் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கைதி படத்திற்கு பின்னர்தான் லோகேஷ் விக்ரம், மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கி பெரிய இயக்குனராக மாறினார். கைதி படத்தில் முடிவில் அதன் இரண்டாம் பாகம் துவங்குவது போல கதையை முடித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். எனவே கைதி எப்போது வரும் என ரசிகர்கள் தொடர்ந்து கார்த்தியிடம் கேட்டு வருகிறார்கள்..
இந்நிலையில், சர்தார் 2 புரமோஷன் விழாவில் கார்த்தி கலந்து கொண்ட போது அவரிடம் கைதி 2 எப்போது வரும்? என ரசிகர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு இப்போது சர்தார் 2-வை இறக்குறோம்.. அதை பாருங்கள்.. கைதி 2 வரும் என்றார். மேலும் லோகேஷ் இப்போது நடிச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கான்.. அவனை மீண்டும் டைரக்ட் பண்ண சொல்லணும்.. கைதி 2 எப்போது வரும் என்பதை நீங்கள் லோகேஷிடம்தான் கேட்கணும் என சொல்லி எஸ்கேப் ஆனார்.