அது சும்மா டிரெண்டிங்!. யாரும் திட்டாதீங்க!.. TTT பட வசனம் பற்றி ஜீவா விளக்கம்!...
நடிகர் ஜீவாவுக்கு கடந்த பல வருடங்களாக வெற்றிப் படங்கள் அமையவில்லை
. அவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஆனாலும் நம்பிக்கை விடாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில்தான் ஜீவா நடித்து உருவான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு தற்போது தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டு படம் நல்ல வசூலையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில்தான் இந்த படத்தில் வரும் ஒரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் சென்றபோது அவரைக் காண பலரும் கூடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்தார்கள். அப்போது மருத்துவமனைக்கு சென்ற கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் படிச்சி படிச்சி சொன்னேனடா.. கண்டிஷன்ஸ் ஒழுங்கா ஃபாலோ பண்ணுங்கன்னு என்று அழுது கொண்டே பேசினார். அவர் பீலிங்காக சொன்னாலும் இதை பலரும் செய்தார்கள்.
இந்நிலையில்தான் தலைவர் தம்பி தலைமையில் படத்தில் ஒரு காட்சியில் ஜீவா அன்பில் மகேஷ் பேசிய அந்த வசனத்தை ஒரு காட்சியில் பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.. சினிமாவில் மட்டுமில்லாமல் இந்த படத்தின் புரமோசனுக்காக தியேட்டர்களுக்கு செல்லும்போது ரசிகர்கள் முன்பும் இதே வசனத்தை பேசி காட்டி வருகிறார் ஜீவா. இது திமுகவினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்த ஜீவாவை கடுமையாக திட்டி வருகிறார்கள்.. அவர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்லிவருகிறார்கள்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளரிடம் பேசிய ஜீவா அது இயக்குனருடைய ஐடியாதான்.. அந்த வசனம் ஒரு காட்சியில் தேவைப்பட்டது... டிரெண்டிங்கிறாகவே இதை செய்தோம். மற்றபடி யாரையும் காயப்படுத்தும் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று பேசியிருக்கிறார்.