துபாயில் இருந்து சென்னை வந்தார் அஜித்.. நண்பர் விஜய்யை நேரில் பார்ப்பாரா?
நடிகர் அஜித்குமார் தனது கார் பந்தய பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு இன்று துபாயில் இருந்து சென்னை வந்தடைந்தார்.
கடந்த சில மாதங்களாக துபாயில் தங்கியிருந்த அவர், அங்கு நடைபெறவிருக்கும் சர்வதேச கார் பந்தயத்திற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். பயிற்சி காலத்தில் அவரை சந்தித்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள், அவருடன் புகைப்படங்கள் எடுத்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சமூக வலைதளங்களில் அவர் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகின.
இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் ராணுவம் துபாயில் உள்ள சில பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக எழுந்த செய்திகளால் அஜித்தின் பாதுகாப்பு குறித்து ரசிகர்கள் கவலையடைந்தனர்.
எனினும், அவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது பத்திரமாக சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அஜித்தைக் கண்ட ரசிகர்கள், அவரை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை வந்த அஜித், தனது நெருங்கிய நண்பரான விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ள சூழலில், இவர்கள் இருவரின் சந்திப்பு நிகழுமா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
Edited by Siva