1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2025 (14:34 IST)

நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

நடிகர் அஜித்குமார் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல், அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று முன்தினம், டெல்லியில் பத்மபூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அஜித்குமார், குடும்பத்துடன் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில், ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
 
இந்த நிலையில், அஜித்குமாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
அவருக்கு வழக்கமான மருத்துவ சோதனை காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டாலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva