1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (16:16 IST)

அஜித் படத்தில் மீண்டும் வாய்ப்பு பெற்ற வித்யூலேகா

தமிழில் இளம் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் நடிகைகள்...?

மனோரமா நடிப்பதை நிறுத்திய பிறகு கோவை சரளா மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறார். தேவதர்ஷினி போன்றவர்களின் நடிப்பில் காமெடியை தேடித்தான் கண்டுப்பிடிக்க வேண்டியிருக்கிறது. இளம் நடிகைகள் என்றால், விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் வித்யூலோகாவும் ஒருவர்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தில் வித்யூலேகா நடித்திருந்தார். அவரை மீண்டும் தனது படத்தில் கமிட் செய்திருக்கிறார் சிவா.

அஜித்தை வைத்து அவர் இயக்கிவரும் புதிய படத்தில் வித்யூலோகாவுக்கும் வேடம் உள்ளது. இதனை அவரே உறுதி செய்துள்ளார்