நடிப்பை தொடர்வேன் - காதலரை திருமணம் செய்த மனிஷா யாதவ்

Sasikala| Last Modified திங்கள், 13 பிப்ரவரி 2017 (17:48 IST)
வழக்கு எண் படத்தில் அறிமுகமான மனிஷா யாதவ் தனது 7 ஆண்டு காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர உள்ளதாக அவர் கூறியிருப்பது மனிஷா யாதவ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதரும்  தகவல்.

 
மனிஷா யாதவ் பெங்களூரைச் சேர்ந்த வர்னித் என்ற தொழிலதிபரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தற்போது  இருவரும் இரண்டு வீட்டாரின் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் நெருக்கமான  உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
 
தனது திருமணத்தையும், திருமணப் புகைப்படத்தையும் இணையத்தில் மனிஷா பகிர்நது கொண்டுள்ளார். அத்துடன்,  திருமணத்துக்குப் பிறகும் நடிப்பை தொடரவிருப்பதாகவும் அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :