செல்போனால் வந்த பிரச்சனை; நடிகை ஷகீலாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஷகீலா. தற்போது அவருக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் கழுத்துப் பகுதியில் அழுத்தம் மற்றும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில், ஷகீலாவின் இந்த அனுபவம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஷகீலா, தற்போதைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதே நேரத்தில், தேவையில்லாமல் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும். குறிப்பாக குழந்தைகள் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஷகீலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
