தனுஷை தாண்டி ரசிக்கப்பட்ட அபிநய்! கடைசியில் கேட்பாரற்று கிடக்கும் அவலம்
சினிமா என்பது ஏற்ற இறக்கம் கொண்ட ஒரு துறை என்பதற்கு சிறந்த உதாரணம் இன்று நடிகர் அபிநயின் மரணத்தை கூறலாம். அந்த சினிமா என்ற அரக்கனுக்குள் சிக்கி தப்பித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காணாமல் போனவர்கள் கோடிக்கணக்கான பேர்களை நாம் குறிப்பிடலாம். இதில் நம் மனதை பெரிய வலிக்கு ஆளாக்கிய ஒரு துயரம் தான் அபிநயின் மரணம். அப்படி ஒரு அழகன் அபிநய். கல்லீரல் பாதிப்பால் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்து இன்று நம்மை எல்லாம் விட்டு மறைந்தார். ஒரு தன்மானம் மிக்க நடிகராக இருந்திருக்கிறார்.
அவர் ஒரு சமயம் தன்னுடைய நிலையை சொல்லி யாரிடமும் உதவி உதவி என்று கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று வருத்தப்பட்டாராம். அவர் இருந்த வீட்டில் அவர் இறந்த பிறகு யாருமே அந்த வீட்டில் இல்லை .காலையில் யாரோ தெரிந்தவர்கள் அவருடைய கதவை தட்டி இருக்கிறார்கள். கதவு திறக்கவில்லை. உள்ளே போய் பார்த்த பிறகு தான் தெரிந்திருக்கிறது அவர் இறந்திருக்கிறார் என்று. துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷை விட மிகவும் ரசிக்கப்பட்டவர் அபிநய். மிகவும் அழகான ஒரு ஹீரோ. சினிமா என்பது இப்படித்தான்.
புரிந்து கொள்ளவே முடியாது. காலையில் அவருடைய வீட்டில் போய் பார்த்து இருக்கிறார்கள். யாருமே இல்லை. அவருடைய உறவினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாருக்கு தகவல் சொல்வது என்றும் தெரியவில்லை. அதன் பிறகு நடிகர் சங்கத்திற்கும் போலீசுக்கும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. நடிகர் சங்கமும் எங்கெங்கோ முயற்சி செய்து இருக்கிறார்கள். அவருடைய உறவினர்கள் என யாருமே இல்லை. உறவினர்கள் நண்பர்கள் என யாருமே இல்லாமல் ஒரு கொடிய நோயால் தனிமையில் இருந்தவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை யோசிக்கக்கூட முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் நரகத்தை அனுபவித்திருப்பார். இதுதான் வாழ்க்கையா ?இந்த வாழ்க்கை நமக்குத் தேவைதானா என எத்தனையோ முறை கூட அவர் நினைத்திருக்கலாம் .அதன் பிறகு நடிகர் சங்கம் இதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என முன் வந்திருக்கிறார்கள். சினிமாவில் அறிவாளிகளுக்கு இடம் கிடையாது. புத்திசாலிகளுக்கு தான் நிரந்தரம். புகழும் பணமும் வரும் பொழுது நம்மை சுற்றி கெட்ட சகவாசங்களும் வரும். என்ன வேண்டுமானாலும் ஆசை காட்டுவார்கள். யார் அந்த அபிநய்? ஒரு மிடில் கிளாஸ் அம்மாவாக ஒரு சில படங்களில் நடித்த டி ராஜாமணி அம்மாள் அவரின் ஒரே மகன் தான் இந்த அபிநய்.
ராஜாமணி அம்மாள் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதன் பிறகு கதாநாயகியாக நடித்து கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் நடித்திருக்கிறார். தமிழிலும் அவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறாராம். அவருடைய அம்மாவுடன் சேர்ந்து அபிநய் மலையாள படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாராம். அதன் பிறகு அவருடைய அம்மாவே இந்த சினிமா எல்லாம் வேண்டாம். படி என சொல்லி இருக்கிறார். ஆனால் அதையும் மீறி வாய்ப்புகள் தேட துள்ளுவதோ இளமை படத்தில் தான் அவர் அறிமுகமாகி இருக்கிறார்.
அந்த சமயத்தில் தனுஷ் குடும்பமே கடனில் தான் இருந்திருக்கிறது. செல்வராகவன் தன்னுடைய அப்பா கஸ்தூரிராஜாவிடம் ஒரு 40 லட்சம் கடன் வாங்கி கொடுங்கள். கடனோடு கடனாக இந்த படத்தை எடுக்கிறேன். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சொன்னதின் பேரில் தான் அந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் தான் கடலில் தத்தளித்த கஸ்தூரிராஜாவின் குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அதே படத்தில் ஒரு பேரழகனாக அறிமுகமாகி முதல் படத்தில் அனைவரையும் கவர்ந்தாலும் அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் தெருக்கோடிக்கு தள்ளப்பட்டு இன்று அவருடைய மரணம் தான் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என அபிநயிக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை பற்றி விவரித்துள்ளார் செய்யாறுபாலு.