ஆரவ்- ஓவியா பிக் பாஸ் காதல்: ஆரவ் குடும்பத்தாரின் கருத்து!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 12 ஜூலை 2017 (20:14 IST)
பிக் பாஸ் நிகழச்சியில் ஆரவ் ஓவியா காதல் படு ஜோராய் உள்ளது. இது குறித்து ஆரவ் குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரவ் சைத்தான் படத்தில்  நடித்திருந்தார். ஆரவ்வின் சொந்த ஊர் நாகர்கோவில். ஆனால், திருச்சியில் தான் வசித்து வந்துள்ளார். கல்லூரிக்காக சென்னை வந்த ஆரவ் அப்படியே மாடலிங் துறைக்குள் நுழைந்து சினிமாவிற்கு வந்துள்ளார்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆரவ்வின் குடும்பத்தினர், தொலைக்காட்சி தான் இதனை காதல் என சித்திரித்து உள்ளது. ஆரவ் ரொம்ப நல்ல பையன், காதல் எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறுகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :