வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 10 செப்டம்பர் 2016 (13:31 IST)

ஆண்டவன் கட்டளை - நாயகன், வில்லன் இல்லாத படம்

ஆண்டவன் கட்டளை - நாயகன், வில்லன் இல்லாத படம்

காக்கா முட்டை மணிகண்டனின் அடுத்த வெளியீடு ஆண்டவன் கட்டளை. பாஸ்போர்ட் பிரச்சனையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடித்துள்ளனர்.


 
 
முன்னணி நட்சத்திரங்கள் இருந்தாலும் நாயகன், நாயகி, வில்லன் என்ற ஃபார்முலாவில் இந்தப் படம் எடுக்கப்படவில்லை. அனைவரும் கதாபாத்திரங்களாக மட்டுமே வருகிறார்கள். நாயகன், நாயகி, வில்லனுக்குரிய பிரத்யோக கவனிப்பு இதில் யாருக்கும் கிடையாதாம்.
 
குற்றமே தண்டனையில் பாடல்களே வைக்காத மணிகண்டன் இதில் 4 பாடல்கள் வைத்திருக்கிறார். ஆண்டவன் கட்டளை படம், கமர்ஷியல் படம் என்று அவர் சொன்னது இதனால்தானோ?