1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Aamir khan wasted in coolie movie fans upset

ரோலக்ஸ் டெம்ப்ளேட்…. சுத்தமாக எடுபடாத அமீர்கான் கேமியோ – ரசிகர்கள் அதிருப்தி!

ரஜினிகாந்த்
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக  இருந்த ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான ‘கூலி’ படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் இன்று படம் வெளியான முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. புதிதாக எதுவும் இல்லாமல் மசாலா படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் திரைக்கதை, கதாநாயக வழிபாடு என அரைத்த மாவையே லோகேஷ் அரைத்துள்ளார் என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த படத்தில் ரசிகர்களைப் பெரிதும் அதிருப்திக்குள்ளாக்கியது அமீர்கான் நடித்த ‘தாஹா’ கதாபாத்திரத்திரம்தான். லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ’ரோலக்ஸ்’ கதாபாத்திரம் பெரிதும் கவனம் ஈர்த்தது. அதனால் அதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி வீணாக்கிவிட்டார் லோகேஷ் என சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
நெகட்டிவ் விமர்சனங்கள்… கூலி படத்துடன் க்ளாஷ்…. வார் 2 முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?