வெள்ளி, 13 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 25 நவம்பர் 2025 (07:34 IST)

அஜித் 64 படம் தொடங்குவது எப்போது?... ஆதிக் கொடுத்த அப்டேட்.!

அஜித் 64 படம் தொடங்குவது எப்போது?... ஆதிக் கொடுத்த அப்டேட்.!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடைய பட சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை.ஆனாலும் அவரது படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங்கும் வசூலும் கிடைக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து தனது அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனையே இயக்க நியமித்துள்ளார். படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அதற்குக் காரணம் அஜித் கேட்கும் அதிக சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளர்கள் முனவரவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் பற்றிப் பேசியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் ”படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. தற்போது லொக்கேஷன் தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.