சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ரிலீஸ் எப்போது?


bala| Last Modified திங்கள், 21 நவம்பர் 2016 (14:54 IST)
சிம்பு நடித்துவரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது.

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக துபாய் செல்லவுள்ளனர். மேலும் பல காட்சிகள் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. அடுத்த வருடம்வரை படப்பிடிப்பு நீளும் என்கிறது படக்குழு.

அதனால், 2017 மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


இதில் மேலும் படிக்கவும் :