வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:18 IST)

பைரவா நீளத்தை குறைச்சிட்டாங்களே... ரசிகர்கள் கவலை

பைரவா படத்தின் நீளம் குறைக்கப்பட்டது, ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்டபடுத்தியுள்ளது.


 

பொங்கலுக்கு வெளியான பைரவா அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் இரண்டாம் பகுதி மெதுவாக நகருவதாகவும், போர் அடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து படத்தின் 7 நிமிடக் காட்சிகள் எடிட் செய்யப்பட்டன.

விஜய் ரசிகர்களில் பலரும் படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதற்குள் 7 நிமிடக் காட்சிகள் வெட்டி எறியப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.