23 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் அமலா

Geetha priya| Last Modified திங்கள், 14 ஜூலை 2014 (10:59 IST)
அமலா பால் இல்லை, அமலா. சத்யாவில் கமல்ஹாசனுடன் மலையாளத்தில் பேசியபடி ரொமான்ஸ் செய்யும் வளையோசை கலகலவென... எஸ், அதே அமலாதான்.
நாகார்ஜுனை திருமணம் செய்து குடும்பம் குழந்தை என செட்டிலான அமலா அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் தலையே காட்டவில்லை. ப்ளூ கிராஸ் மெம்பராக ஆக்டிவாக செயல்படுகிறவர் சமூகநலப் பணிகளிலும் கவனம் செலுத்துகிறார். அமலாவை தமிழ் ரசிகர்கள் திரையில் பார்த்து 23 வருடங்களாகிறது.
 
23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அமலா. இந்தமுறை பெரிய திரை கிடையாது, சின்னத்திரை. ஆம், தொலைக்காட்சி தொடர் ஒன்றில் (தொடரின்பெயர் உயிர்மெய்) அமலா நடிக்க உள்ளார். 12 மருத்துவர்களைப் பற்றிய மெகா தொடராம் இது. அமலா 12 பேர்களில் ஒருவராக நடிக்க உள்ளார்.
 
இந்த சீரியலின் கதையை கேட்ட பிறகு நடிக்காமல் இருக்க முடியவில்லை என்று சின்னத்திரையில் நடிப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். சின்னத்திரையில் நடிப்பவர் பெரிய திரைக்கு விரைவில் வருவாரா?
 
அதற்கு வாய்ப்பில்லை. ஏராளமான வேலைகள் உள்ளன. சினிமாவுக்கு அதிக நேரம் செலவளிக்க வேண்டிவரும். அதனால் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்று அமலா கூறியுள்ளார்.
 
காலம் எல்லா வாய்ப்புகளையும் வழங்கவல்லது என்பதால் அமலாவின் பெரியதிரை பிரவேசத்துக்கு காத்திருப்போம்.
 


இதில் மேலும் படிக்கவும் :