வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2016 (18:13 IST)

2 கோடி பார்வையாளர்களை கடந்த சூர்யாவின் 'எஸ் 3 டீசர்'!!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கம் 3' படத்தின் டீசர் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 2 கோடியே 48 லட்சம் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.


 
 
ஹரி இயக்கத்தில் உருவான 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமான இப்படத்தின் 83 நொடிகள் கொண்ட டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே 70,000 லைக்ஸ்களை பெற்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பார்வையை கடந்து வருகிறது. 
 
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், சூரி, ராதாரவி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் தாகூர் அனூப் சிங் வில்லனாக அறிமுகமாகிறார்.
 
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 16-ந் தேதி இப்படம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.