வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (21:24 IST)

பிரபல நடிகரின் பாடலுக்கு 1 மில்லியன் லைக்ஸ்…ரசிகர்கள் மகிழ்ச்சி

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இப்படம் சூரரைப் போற்று படத்தைப் போன்று  ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல் வெளியான நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ல செல்லம்மா பாடல் 1 மில்லியன் லைக்குகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.
 

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்ற படம் டாக்டர். இப்படத்தில்  ரகுல் ப்ரித்திசிங், ஷரத் கெல்கர் இஷா கோபிகர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விரையில் இப்படம் ரிலீசாக உள்ளது.

மேலும் நெல்சன் இப்படத்தை அடுத்து, விஜய்யின் 65 வது படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.