புயல் - இளையராஜா இசை நிகழ்ச்சி ரத்து

Webdunia|
FILE
கனடா தலைநகர் டொரண்டாவில் நவ. 3ஆம் தேதி நடப்பதாக இருந்த இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

அமெ‌ரிக்காவை தாக்கிய சாண்டி புயல் அமெ‌ரிக்காவை தாண்டியும் அழிச்சாட்டியம் செய்துள்ளது. முக்கியமாக விமான சேவை. மொத்தமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் அவதிக்குள்ளாயினர். இந்த பாதிப்பிலிருந்து மீள அமெ‌ரிக்காவுக்கு கொஞ்ச காலம் பிடிக்கும்.

நமது விஷயத்துக்கு வருவோம். புயல் காரணமாக கனடாவில் நடத்தயிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறார்களாம். அமெ‌ரிக்காவில் இடி இடித்தால் கனடாவில் மழை பெய்யும் என்பதற்கு இது சின்ன சாம்பிள். கனடாவின் வானிலையையும் சாண்டி கணிசமாக சீர்குலைத்திருக்கிறது.
இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சி நவம்பர் மாதத்தில் நடப்பதற்கு ஒருசாரார் ஏற்கனவே எதிர்ப்பு தெ‌ரிவித்திருந்தனர். ஒரேயொரு ரசிகன் வந்தாலும் இசை நிகழ்ச்சி நடக்கும் என்று இளையராஜா சூளுரைத்திருந்தார். ஆனால் இயற்கைக்கு முன்னால் மனிதன் எம்மாத்திரம்?


இதில் மேலும் படிக்கவும் :