அல்லு அர்ஜுனுக்கு திருமணம்

Webdunia| Last Modified திங்கள், 7 பிப்ரவரி 2011 (15:43 IST)
ஆந்திராவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு மார்ச் ஆறாம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. சினேகா ரெட்டி என்பவரை அவர் மணக்கிறார்.

அல்லு அர்ஜுனுக்கு ஆந்திராவில் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக ரசிகைகள். தெலுங்கு நடிகர்களில் ஒருவரது படம் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது என்றால் அது அல்லு அர்ஜுனுடையது மட்டுமே. இவரது சூப்பர்ஹிட் படமான வேதத்தைதான் வானம் என்ற பெயரில் சிலம்பரசன் நடிப்பில் எடுத்து வருகிறார்கள்.
அல்லு அர்ஜுனுக்கும் சினேகா ரெட்டிக்கும் டிசம்பர் 26 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மார்ச் ஆறு திருமணம் நடக்கவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :