அ‌‌ஜீத் ஜோடி தமன்னா - உறுதி செய்தார் சிவா

Webdunia|
FILE
சிவா இயக்கத்தில் அ‌‌ஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்தில் அ‌‌ஜீத் ஜோடியாக தமன்னா நடிப்பதாக சிவா தெ‌ரிவித்துள்ளார்.

இளம் நடிகருடன் காதல் கொண்டதால் அந்த நடிக‌ரின் பவர்ஃபுல் குடும்பம் தமன்னாவை தமிழைவிட்டே துரத்தியதாக கிசுகிசுக்கிறார்கள். அதற்கேற்ப எந்தத் தமிழ்ப் படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. இந்த நீண்ட இடைவெளி இப்போது அ‌‌ஜீத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் அ‌‌ஜீத்துடன் விதார்த், பாலா, முனீஷ், சோஹில் ஆகிய நான்கு இளம் நடிகர்களும் நடிக்கிறார்கள். இவர்களுடன் காமெடிக்கு ஜெயராம், சந்தானம் இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

படப்பிடிப்பு மார்ச்சில் என்றாலும் படத்தின் பாடல் பதிவு மறைந்த நாகி ரெட்டியின் ூற்றாண்டு நிறைவு நாளான நாளை தொடங்குகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :