த்ரிஷாவின் கூடுதல் ரொமான்ஸ்

Webdunia| Last Modified புதன், 1 ஏப்ரல் 2009 (14:14 IST)
த்ரிஷாவை கிளாமர் இல்லாமல் காட்டிய படம் அபியும் நானும். மொழி அளவுக்கு ஹிட் இல்லையென்றாலும், முதலுக்கு மோசம் செய்யவில்லை ராதாமோகனின் படம்.

தற்போது தெலுங்கிலும் அபியும் நானும் வெளியாகியிருக்கிறது. அங்கு படத்தின் பெயர், ஆகாச மன்தா. மரத்தையே மரவுரி இல்லாமல் பார்க்க ஆசைப்படுகிறவர்கள் தெலுங்கு ரசிகர்கள். அவர்களுக்கு த்ரிஷாவின் வெஜிடேரியன் பெர்பாமன்ஸ் வேப்பங்காயாக கசக்குமே? அதற்காக எக்ஸ்ட்ராவாக ஒரு பாடலை சேர்த்திருக்கிறார்கள்.

கணேஷ் வெங்கட்ராமனுடன் த்ரிஷா ஆடும் இந்தப் பாடல் தமிழில் இல்லை. தெலுங்குக்காக சேர்த்திருக்கிறார்கள். இதுவொரு டூயட். இந்த பாடலால் தெலுங்கு ரசிகர்கள் திருப்தியடைவார்களா என்பது தெரியவில்லை. யானைப் பசிக்கு சோளப்பொரி என்பது இதுதானா?


இதில் மேலும் படிக்கவும் :