ஹன்சிகாவின் அகலக்கால்

Webdunia|
FILE
திறமைக்கு அதிகமாக புகழும் பணமும் கிடைக்கையில் என்ன செய்வதென்று பு‌ரியாத ஒரு திணறல் ஏற்படும். உலகின் கீழ் இயங்கும் எல்லாவற்றிற்கும் மனசு ஆசைக் கொள்ளும். அப்படியொரு மனநிலையில் இருக்கிறார் ஹன்சிகா.

அம்மணி பிறந்தநாள் வரும்போதெல்லாம் அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து அவற்றின் எண்ணிக்கை இப்போது 22ஐ தொடுகிறது. விரைவில் முதியோர்களுக்கான விடுதி தொடங்கவும் ஐடியா இருக்கிறதாம். வரவேற்க வேண்டிய விஷயம். அதற்காக ஹன்சிகாவின் விடுதிகள் ஒன்று பத்து என பல்கி பெருகும்படியெல்லாம் வாழ்த்த முடியாது. அனாதைகள் பெருகுவது மனிதத்தன்மைக்கு நல்லதல்ல.
இதுவரை ஓகே. இதன் பிறகு அவர் சொல்கிற ஒருவிஷயம்தான் இடிக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருவதாலும் இந்தியில் நடிக்க வேண்டும் என்ற பேராவல் இருப்பதாலும் இந்த மூன்று மொழிகளில் படம் தயா‌ரிக்க விரும்புகிறாராம். தனது இந்த மும்மொழி ஐடியாவை நெருங்கியவர்களிடம் சீ‌ரியஸாக விவாதித்து வருவதாக‌க் கேள்வி.
்‌ரி ரோசஸ் என்ற ஒரே படத்தில் ரம்பாவின் ஃபைனான்ஸ் காலி. இவரோ த்‌ி லாங்குவேஜுக்கு குறி வைக்கிறார். எதெது காலியாகப் போகிறதோ.


இதில் மேலும் படிக்கவும் :