விண்ணைத்தாண்டி வருவாயா... அசோகமித்ரன் கதை?

webdunia photo
WD
அசோகமித்ரன் தயா‌‌‌‌ரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபு‌‌‌‌ரிந்தவர். சினிமாவின் இண்டு இடுக்குகள் மட்டுமின்றி அங்குள்ள மனிதர்களின் சிடுக்குகள்வரை நன்கு அறிந்தவர். சினிமாவை பின்னணியாகக் கொண்டு இவர் எழுதிய நாவல் கரைந்த நிழல்கள். சினிமாவில் அல்லல்படும் பலரது கதை இந்த நாவலில் இடம்பெறும்.

கரைந்த நிழலை மையமாக வைத்து தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கவுதம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சினிமாவில் பல அவமானங்களை சந்திக்கும் உதவி இயக்குனராக சிம்பு நடித்திருக்கிறார்.

Webdunia|
நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர் அசோகமித்ரன். இவரது தண்ணீர், கரைந்த நிழல்கள், 18 வது அட்சக்கோடு உள்ளிட்ட நாவல்கள் தமிழின் முக்கியமான அடையாளங்கள்.
அசோகமித்ரனிடம் முறைப்படி அனுமதி வாங்கி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கவுதம் எடுத்து வருகிறாரா? அல்லது விண்ணைத்தாண்டி வருவாயா கரைந்த நிழல்களுக்கு சம்பந்தமில்லாத கதையா? கவுதம் பதில் சொன்னால் மட்டுமே தெ‌ரியவரும்.


இதில் மேலும் படிக்கவும் :